யாழில் வாள் வெட்டு தாக்குதல் ; அதிரடி காட்டிய பொலிஸார்
அண்மையில் வேலணை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், பிரதான சந்தேக நபரை 10 நாள்களின் பின்னர் இன்று கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 31 ஆம் திகதியன்று வேலணை அராலி சந்திக்கு அண்மையில் காரில் சென்ற ஒருவரை பட்டா ரக வாகனத்தில் சென்ற குழு ஒன்று வழிமறித்து வாளால் வெட்டி கடுங் காயங்களுக்கு உள்ளாக்கிவிட்டுச் தப்பிச் சென்றிருந்தது.
விரைவில் கைது
கடும் காயமுற்ற நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குறித்த வாள் வெட்டுடன் தொடருடைய குழுவை தேடி பொலிசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரி தலைமையிலான அணியினரால் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளார். இதேநேரம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களும்.
விரைவில் கைதுசெய்யப்படுவர் என தெரிவித்த ஊர்காவற்றுறை பொலிசார் கைதான பிரதான நபர் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் என்றும்.தெரிவித்தனர்