யாழ் இளையோருக்கு வலைவீசும் சுவிஸ் வாழ் தமிழர்; அம்பலமான தகவல்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna TikTok Switzerland
By Sulokshi Mar 03, 2025 11:14 PM GMT
Report

 யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையோருக்கு ரிக் ரொக் வீடியோக்கள் மூலம் வெளிநாட்டு ஆசையை தூண்டி , அவர்களிடம் பணத்தினை கொள்ளையிட்டு வந்த கும்பலின் பிரதான சூத்திரதாரி சுவிஸ்லாந்தில் உள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது .

கடந்த மாதம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை கடத்தி, அவரது வங்கி கணக்கில் இருந்த 80 இலட்ச ரூபாயை மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ் இளையோருக்கு வலைவீசும் சுவிஸ் வாழ் தமிழர்; அம்பலமான தகவல்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Swiss Tamils Scamming People In Jaffna Tiktok

விமான நிலயத்தில் கைது

அந்த விசாரணைகளில் அடிப்படையில் பெண் உள்ளிட்ட மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் , வெளிநாடு தப்பி செல்ல முற்பட்ட ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழில் யுவதியை மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை; காணொளியால் அதிர்ச்சி

யாழில் யுவதியை மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை; காணொளியால் அதிர்ச்சி

கைதான நால்வரும் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (2) இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ் இளையோருக்கு வலைவீசும் சுவிஸ் வாழ் தமிழர்; அம்பலமான தகவல்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Swiss Tamils Scamming People In Jaffna Tiktok

கைதானவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ்லார்ந்து நாட்டில் வசிக்கும் நபர் ரிக் ரொக் தளத்தில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என அச்சை வார்களைகூறியுள்ளார்.

அதற்கான விசா ஒழுங்குகளை செய்து தருவதாகவும் , வங்கியில் நிலையான வைப்புக்கள் இல்லாதவர்களுக்கு , அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவதாக விளம்பர காணொளிகளை பதிவேற்றியுள்ளார்.

அதனை நம்பி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் சுவிஸ்லார்ந்தில் உள்ளவரை தொடர்பு கொண்ட போது, ஆவணங்களை யாழில் உள்ள நபர் ஒருவரிடம் கையளிக்குமாறு , கூறியுள்ளார்.

யாழ் இளையோருக்கு வலைவீசும் சுவிஸ் வாழ் தமிழர்; அம்பலமான தகவல்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Swiss Tamils Scamming People In Jaffna Tiktok

கடத்திச்சென்று பணம் பறிப்பு

அவரை நம்பி ஆவணங்களை கையளிக்க சென்ற போதே இளைஞன் கடத்தி செல்லப்பட்டு , இளைஞனின் வங்கி கணக்கில் உள்ள பணத்தினை தமது கணக்குக்கு மாற்றியே 80 இலட்ச ரூபாயையும் கொள்ளையடித்துள்ளனர்.

எரிபொருள் ஆர்டர் இல்லை; ஜனாதிபதி அலுவலகம் முன் குவிந்த விநியோகஸ்தர்கள்

எரிபொருள் ஆர்டர் இல்லை; ஜனாதிபதி அலுவலகம் முன் குவிந்த விநியோகஸ்தர்கள்

அதன் பின்னரே , தமது கணக்கு இலக்கங்களுக்கு பணத்தினை மாற்றினால் தாம் அகப்பட்டு கொள்வோம் என அறிந்து , பெரியளவிலான பணம் இல்லாது உள்ள இளையோரை இலக்கு வைத்து , வெளிநாடு செல்வதற்காக அந்நாடுகளுக்கு வங்கி கணக்கில் காட்ட வேண்டிய தொகையை , தாம் வைப்பிலிட்டு காண்பிக்கிறோம் என கூறி அவர்களின் வங்கி கணக்கு ,

யாழ் இளையோருக்கு வலைவீசும் சுவிஸ் வாழ் தமிழர்; அம்பலமான தகவல்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Swiss Tamils Scamming People In Jaffna Tiktok

அடையாள அட்டை இலக்கம் , உள்ளிட்ட தரவுகளை பெற்றுக்கொண்டு, வங்கியில் பணம் வைத்துள்ளவர்களை கடத்தி அந்த பணத்தினை அவர்களின் வங்கி கணக்குக்கு முதல் கட்டமாக மாற்றி அவர்களிடம் இருந்து பணமாக பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுமார் 50 பேரிடம் தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவற்றினை எல்லாம் சுவிஸ்லார்ந்தில் உள்ள நபரே வழி நடத்தி வந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் வங்கியில் பணம் இல்லாது வெளிநாடு செல்லும் நோக்குடன் மோசடி கும்பலிடம் தமது வங்கி உள்ளிட்ட தரவுகளை வழங்கியவர்கள் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்ளாடைக்குள் சிக்கிய பொருளால் பொலிசார் அதிர்ச்சி

உள்ளாடைக்குள் சிக்கிய பொருளால் பொலிசார் அதிர்ச்சி

ஏனெனில், கைது செய்யப்பட்டவர்களை விட அந்த கும்பலை சேர்ந்த வேறு சிலர் இன்னமும் கைது செய்யப்படாமல் உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அவர்கள் யாரையும் கடத்தி , உங்கள் வங்கி கணக்குக்கு பணத்தினை மாற்றி , அதனை உங்களிடம் இருந்து பணமாக பெற்றுக்கொள்ளலாம்.

அவ்வாறு செய்யப்பட்டால் , நீங்களும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் என கைது செய்யப்படலாம் எனவும் பொலிஸார் அறிவுறுத்துயுள்ளனர்.

எனவே அந்த மோசடியாளர்களிடம் தமது வங்கி தகவல்களை வழங்கியவர்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்; பொலிஸார் திகைப்பு!

நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்; பொலிஸார் திகைப்பு!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US