யாழில் திருமணமான இருவாரத்தில் விவாகரத்துக்கு தயாரான சுவிஸ் மாப்பிள்ளை; அதிர்ச்சியில் பெண் வீட்டார்!
யாழில் இரு வாரங்களுக்கு முன்னர் திருமணம் செய்த சுவிஸ் மாப்பிள்ளை விவாகரத்துக்கு தயாராவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மாப்பிள்ளையின் இந்த முடிவால் பெண் வீட்டினர் நிலைகுலைந்து போயுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காதலன் இருப்பதாக விசமிகள் தகவல்
சுவிஸ் வாழ் 30 ஐ கடந்த இளைஞனுக்கும், யாழ்ப்பாணம் தென்மராட்சியை சேர்ந்த 25 வயதை கடந்த யுவதிக்கும் சில நாட்களின் முன்னர் திருமணம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் மணமகளான் யுவதிக்கு ஏற்கனவே காதலன் இருப்பதாக விசமிகள் யாரோ AI மூலம் சித்தரித்து பெறப்பட்ட புகைப்படத்தை மாப்பிள்ளைக்கு அனுப்பியதாக கூறப்படுகின்றது.
அதனை உண்மையென நம்பிய புது மாப்பிள்ளை, பெண்ணிடம் அது தொடர்பில் ரகளை பண்னியதாக கூறப்படுகின்றது.
எனினும் அப்படி எதுவும் இல்லையென பெண் வீட்டினர் நியாயப்படுத்தியும் அதனை ஏற்காத மாப்பிள்ளை, தனியே கொழும்பு சென்றதுடன் பெண்னிடம் விவாகரத்து பெற முயல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வெளிநட்டு மாப்பிள்ளையால் மகளின் வாழ்க்கை கேள்விகுறியில் இருப்பதாக பெண்ணின் பெற்றோர் அதிச்சியடைதுள்ளதாக கூறப்படுகின்றது.