தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை 12 பேர் நீந்தி சாதனை
தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 12 நீச்சல் வீரர்கள் அஞ்சல் பந்தய பாணியில் பாக்கு நீரிணையை கடந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் இயங்கி வரும் ராம் சேது ஓபன் நீச்சல் அறக்கட்டளையைச் சேர்ந்த 12 இளம் நீச்சல் வீரர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து 10 மணி நேரம் 20 நிமிடங்களில் பாக்கு ஜலசந்தியைக் கடந்தனர்.
இரு நாடுகளினதும் அனுமதியுடன் மேற்படி நீச்சல் வீரர்கள் தமது பயிற்சியாளர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் இராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதுறையிலிருந்து இரண்டு படகுகளில் இலங்கை வந்தடைந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு அஞ்சலோட பாணியில் தலைமன்னாரில் இருந்து நீந்தத் தொடங்கிய 12 பேரும் மாலை 4.40 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை அடைந்தனர்.
[6VD96JJ ]