சுவாதி மோகன் தொடர்பில் சமூகவியல் ஆய்வாளர் வெளிப்படுத்திய முக்கிய தகவல்!
செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை வடிவமைப்பதில் முக்கிய தலைமைத்துவமாக கருதப்படும் சுவாதி மோகன் ஒரு தமிழர் என சொல்லப்படுகிறது.
இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த இவர் தமிழரா கன்னடரா என்ற கருத்துக்கள் நிலவிவரும் நிலையில் இவர் ஒரு தமிழர்தான் என்று தமிழ் நாட்டின் சமூகவியல்துறை ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழரின் சமூக அடுக்கமைப்பிலுள்ள வேளாளர் குடியைச் சேர்ந்தவர் என்றும் முதலியார் பட்டத்தினை உடையவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
பெங்களூரில் கன்னடர்கள் மட்டுமன்றி குறிப்பிடத்தக்களவில் தமிழர்களும் வாழ்ந்துவருகின்றமை தெரிந்ததே. இந்நிலையிலேயே சுவாதி மோகன் ஒரு தமிழ் குடியைச் சேர்ந்தவர் என அந்த ஆய்வாளர் கூறியுள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் “பெர்சிவரன்ஸ் ரோவர்” (Perseverance rover) செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து எடுத்த முதல் புகைப்படத்தையும் பூமிக்கு அனுப்பியுள்ளதாக, நாசா அறிவித்துள்ளது.
இந்த ரோவர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. Perseverance roverஐ நெறிப்படுத்தி தரையிறக்கினார் சுவாதி மோகன்.
கடந்த ஆண்டு ஜூ 30ஆம் திகதி ஏவப்பட்ட விண்கலம் முதல் இன்று தரையிறங்கும் வரை ஏன் அதன் வடிவமைப்பு உட்பட முழுமையாக தலைத்துவம் வழங்கிய சுவாதி மோகனே இதன் மையக்கருவாக இருந்தார்.