சுவ செரிய அம்புலன்ஸ் சேவை தொடர்பில் வெளியான தகவல்
பணியாளர்களின் இடமாற்றங்கள் தொடர்பான பிரச்சினை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு 1990 சுவசெரிய அவசர சேவை பணியாளர்கள் இன்று (03) முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சுவசெரிய சேவையின் செயல்பாட்டுப் பிரதானி லெப்டினன்ட் கேணல் சுனெத் ஜீவன் பெர்னாண்டோ அவ்வாறானதொரு பணிப்புறக்கணிப்பு குறித்து தமக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் அதிகாரிகளின் இடமாற்றங்கள் தொடர்பாக புதிய இடமாற்றக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து தற்பொழுது சில நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், சுவசெரிய சேவையானது ஒரு அத்தியாவசிய சேவையாகும் எனச் சுட்டிக்காட்டிய செயல்பாட்டுப் பிரதானி, தற்போதைய நிலையிலும் சேவைகள் வழமை போன்று தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.