Reecha இல் உதயமான சைவ உணவகம்! வெறும் 300 ரூபாதான்; வாருங்கள் சுவைக்கலாம்
ReeCha Organic Farm (Pvt) இல் தற்போது உருவாகியுள்ள சுவையருவி சைவ உணவகம் அங்கு செல்லும் மக்களுக்க்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் பகுதியில் மிக கம்பீரமாய் உருவாகியுள்ள ReeCha Organic Farm (Pvt) Ltd கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பட்ட மகிழ்ச்சியான அனுபவங்களை நீங்கள் உணரக்கூடியாத இருக்கும்.
மண் சட்டி பானையில், விறகடுப்பில் சமைத்த உணவு
அந்தவகையில், மேலத்தேய அசைவ உணவுகள் எல்லாம் கிடைத்த நிலையில் சைவ உணவு இல்லையே என்ற ஏக்கம் அங்கு சென்று வந்தவர்கள் சிலரின் கோரிக்கையாக இருந்தது .
இந்நிலையில் ReeCha உறவுகள் பலரின் கோரிக்கைக்கு அமைவாக தற்போது சைவ உணவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெறும் 300 ரூபாவில் மிகவும் தரமாக சமைக்கப்பட்ட சைவ உணவுகளை நீங்கள் ருசிக்கலாம்.
அதிலும் மண் சட்டி பானையில், விறகடுப்பில் சமைத்த உணவுகளை நீங்கள் சாப்பிடலாம். அதேசமயம் தாயகம் திரும்பும் எம் உறவுகளை மட்டுமல்லாது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் இடமாகவும் ReeCha Organic Farm உள்ள நிலையில் தற்போது சைவ உணவகமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை ReeCha செல்லும் மக்களுக்கு மகிச்ழ்ழியை கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை.