சபுகஸ்கந்த செயற்பாடுகள் இடைநிறுத்தம்!
பராமரிப்பு நடவடிக்கை காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக தெரிவித்தார்.
அதற்கிணங்க, இம்மாதம் 18ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி வரை சுத்திகரிப்பு நிலைய நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுமெனவும் அவர் கூறினார்.
பராமரிப்பு நடவடிக்கை
பெற்றோல் உற்பத்தி அலகுகளின் செயல்பாட்டை மீட்டமைப்பதற்கான பராமரிப்பு நடவடிக்கையின் காரணமாக இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் திருத்த பணிகள் நடைபெறும் காலப்பகுதியில் எரிபொருள் விநியோகத்தை தட்டுப்பாடின்றி பேணுவதற்கு தேவையான எரிபொருள் இருப்புக்கள் மற்றும் எரிபொருள் கேள்விகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.