15 வருடங்களுக்கு பின்னர் பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்

Sri Lanka Police Kalutara Sri Lanka Police Investigation Crime Court of Appeal of Sri Lanka
By Sahana Jan 12, 2025 04:13 PM GMT
Sahana

Sahana

Report

2010 ஆம் ஆண்டு சிறைச்சாலை பேருந்தின் தகட்டை அகற்றி தப்பிச் சென்ற சந்தேகநபரான கடாபி என்ற உபேகா சந்திரகுப்தா 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறையில் ஆரம்பமான கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்

அம்பாறையில் ஆரம்பமான கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்

அவர் வெளிநாட்டிலிருந்து இந்த நாட்டிற்குத் திரும்பி பிலியந்தலைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி கெஸ்பேவ, மாகந்தன பகுதியில் உள்ள ஒரு கிராமிய வங்கியைக் கொள்ளையடிக்க சென்ற சந்தேக நபர்களில் முக்கிய சந்தேகநபர், கடாபி என்ற உபேக சந்திரகுப்தா ஆவார்.

15 வருடங்களுக்கு பின்னர் பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர் | Suspect Caught By Police After 15 Years

மாகந்தன கிராமிய வங்கியைக் கொள்ளையடிக்க அவரும் மற்ற இரண்டு பேரும் சென்ற போது, ​​நிறுவனத்தின் முகாமையாளர் அவசரகால ஒலிப்பானை அடித்ததும் கடாபியும் மற்றொரு சந்தேக நபரும் தப்பி சென்றனர்.

கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில், கடாபியையும் பொலிஸார் கைது செய்தனர்.

இதன்போது அவரிடமிருந்து ஒரு கைக்குண்டு, துப்பாக்கி உள்ளிட்ட சில தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொரளை மெகசின் சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட போது பேருந்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

15 வருடங்களுக்கு பின்னர் பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர் | Suspect Caught By Police After 15 Years

பேருந்தின் உட்புறத்திலிருந்து இரும்புத் தகட்டை அகற்றி இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். பின்னர் சந்தேகநபர் சுமார் 10 ஆண்டுகள் வெளிநாட்டில் தலைமறைவாகி, விசா காலாவதியான நிலையில், சுமார் 6 மாதங்கள் அபுதாபியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு நாடு திரும்பிய சந்தேகநபர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாகி வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், பிலியந்தலை, மாம்பே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகநபர் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பிலியந்தலை பொலிஸார் இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கடாபியை கைது செய்தனர். சந்தேகநபர் தப்பிச் சென்று சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி... வெளியான பரபரப்பு காரணம்!

வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி... வெளியான பரபரப்பு காரணம்!

சந்தேகநபர் வங்கிக் கொள்ளைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவதற்கு முன்பு பல போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்காக களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் நான்கு சந்தேக நபர்களுடன் சிறைச்சாலை அறையைத் தோண்டி தப்பிக்க முயன்றுள்ளார்.

2017 ஆம் ஆண்டு பாணந்துறை உயர் நீதிமன்றத்தில் சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஆஜராகாமல் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன்,

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட வேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளது. அதன்படி, அந்த வழக்கு தொடர்பாக சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

திருகோணமலையில் திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்ட முக்கிய குடியிருப்புப் பகுதி!

திருகோணமலையில் திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்ட முக்கிய குடியிருப்புப் பகுதி!

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பரிஸ், France

14 Jan, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, கந்தர்மடம்

12 Jan, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

12 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தற்பளை, நுணாவில் கிழக்கு, கொழும்பு

13 Jan, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Markham, Canada

13 Jan, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
33ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

21 Dec, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Breda, Netherlands

16 Dec, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்

04 Jan, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Toronto, Canada

08 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

பூநகரி, கொழும்புத்துறை, புதுக்குடியிருப்பு

09 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Toronto, Canada

09 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, Montreal, Canada

11 Jan, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany

11 Jan, 2015
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Markham, Canada

10 Jan, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US