119 என்ற எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்தி தவறாக வழிநடத்த முயன்ற சந்தேகநபர் கைது
காவல்துறையின் துரித இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தி காவல்துறையினரை தவறாக வழிநடத்த முயன்ற சந்தேகநபரை கைது செய்யுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றம், காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் 119 என்ற துரித இலக்கத்திற்கு 12 தடவைகள் அழைப்பை ஏற்படுத்தி, காவல்துறையினரை தவறாக வழிநடத்த முயன்றுள்ளார்.
திருப்பனே – பெதிஸ்ரம்பேவ பகுதியில் வசிக்கும் ஒருவரையே இவ்வாறு கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர், கடந்த டிசம்பர் மாம் 18 ஆம் திகதி, 119 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளமைக்கான ஆதாரங்களை காவல்துறையினர் மன்றில் சமர்பித்துள்ளனர்.
அத்துடன், சந்தேகநபர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய, திருப்பனே காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் எந்தவொரு குற்றங்களும் இடம்பெறவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், குற்றவியல் நடைமுறை சட்டக்கோவைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் குற்றமிழைத்திருப்பதால், அவரை கைது செய்து நீதிமன்றில் பிரசன்னப்படுத்துமாறு அநுராதபுரம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.