மாட்டை திருடி வெட்ட முயன்ற சந்தேக நபர் தப்பியோட்டம்
வாழைச்சேனை பகுதியில், மாடு ஒன்றை திருடி வெட்ட முயற்சித்த நபர் தப்பியோட்டம். உதவிக்கு நின்ற இருவர் கைது்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனைப் பகுதியில், மாடு ஒன்றை திருடி வீடொன்றில் வைத்து வெட்ட முயற்சித்த நபர் தப்பியோடிய சம்பவமொன்று இன்று (02) இடம்பெற்றுள்ளது.
இரகசிய தகவல்
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய அடையாளம் காணப்படாத நபர் ஒருவரின் மாட்டை திருடி இரகசியமான முறையில் வெட்ட தயாரான நிலையில் குறித்த வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன் போது மாட்டை திருடிய பிரதான சந்தேக நபர் மதில் மேலாக பாய்ந்து தப்பிச் சென்றுள்ளதுடன், மாடு வெட்ட உதவிக்கு நின்ற இருவரை வாழைச்சேனை பொலிஸார் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர்.
மாடு வாழைச்சேனை பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.