பரபரப்பில் சர்வைவர் நிகழ்ச்சி; ஓடிசென்ற நடிகர் அர்ஜுன் ; விழுந்தது யார்?
மக்கள் மத்தியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் மிக சுவாரசியமாக தொகுத்து வழங்கி வருகிறார்.
நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் காடர்கள் , வேடர்கள் என இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியில் பங்கேற்று வருகின்றனர். நிகழ்ச்சியில் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வந்த பார்வதி நேற்று முன் தினம் எலிமினேட் ஆனதையடுத்து, புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது.
அதில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க போட்டி நடைபெறுகிறது. போட்டியாளர்கள் தோளில் அதிக எடையைத் தாங்க வேண்டும். யார் அதிக நேரம் தாங்கி இருக்கிறார்களோ அவர்களே போட்டியில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
இந்தப் போட்டியில், காடர்கள் குழுவில் இருந்து உமாபதி ராமையா, ராம் ஆகியோரும், வேடர்கள் குழுவில் இருந்து நந்தா மற்றும் ஐஸ்வர்யா மோதுகின்றனர். போட்டியில் சிறிது நேரத்துக்கு ஒருமுறை எடைக் கூட்டப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு போட்டியாளர் எடையைத் தாங்க முடியாமல் கீழே விழு நடிகர் அர்ஜூன் ஓடி சென்று பிடிக்க முயல்கிறார்.
எனினும் கீழே விழும் போட்டியாளர் யார் , அவருக்கு என்ன ஆனது என்ற தகவல்கள் இன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டால் மட்டுமே தெரியவரும்.