இலங்கையில் இதய நோயுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தியாவில் சத்திரசிகிச்சை!
இலங்கையில் இதய நோயுடன் பிறக்கும் பிள்ளைகளுக்கு இந்தியாவில் சத்திரசிகிச்சை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் அங்கீகாரம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு வருடமும் 3000 குழந்தைகள் இதய நோயுடன் பிறப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு இதய நோயுடன் பிறக்கும் குழந்தைகளில் 1500 மேற்பட்டோருக்கு சத்திரசிகிச்சை செய்யும் நிலைமையும் ஏற்படுக்கின்றது.
இதேவேளை கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைகளில் ஒரு ஆண்டில் சுமார் 900 குழந்தைகளுக்கு தான் சித்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வசதிகளே வைத்தியசாலையில் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் இதய சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கான நெரிசலைக் குறைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகின்றன.
இந்தவகையில் இந்தியாவின் கொச்சியில் அமைந்துள்ள அம்ரிதா மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில் பிள்ளைகளுக்கான சிக்கலான இதய சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக இரண்டு வருடங்களுக்கான கருத்திட்டமொன்று றொட்டரி கழகத்தின் நிதியுதவியின் கீழ் இந்தியாவின் 3201 மாவட்ட சர்வதேச றொட்டரி கழகம் மற்றும் ஆர்.ஐ.டீ. 3220 கொழும்பு மேற்கு றொட்டரி கழக நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்தியாவின் 3201 மாவட்ட சர்வதேச றொட்டரி கழகம் மற்றும் ஆர்.ஐ.டீ. 3220 கொழும்பு மேற்கு றொட்டரி கழகத்திற்கும் இலங்கை சுகாதார அமைச்சும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.