என் மகனை உயிருடன் ஒப்படையுங்கள், பலிகொடுக்க என்னால் முடியாது ; சுரேஸ் சலேவின் தாய்
எனது மகனை உயிருடன் என்னிடம் ஒப்படையுங்கள். நாட்டுக்காக நான் அவரை ஒப்படைத்தேன். ஆனால் அரசியல் நோக்கத்துக்காக பலிகொடுக்க என்னால் முடியாது என்று சுரேஸ் சலேவின் தாய் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உளவுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக இன்று (08) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டம்
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தாய்மார்கள் எவரும் இனி இராணுவத்துக்கு தமது பிள்ளைகளை அர்ப்பணிக்கக் கூடாது. அவ்வாறு வழங்கினால் என்னை போன்றே போராட நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட அரசியல் தரப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
இதன்போது சுரேஷ் சலேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, முள்ளிவாய்க்கால் பழிவாங்களை நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிக்கிறது. புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் இடமளிக்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.