சுரேஷ் சலே வாயால் மட்டுமே சாப்பிடவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் சுரேஷ் சலே, வாய் மூலமாக உணவு உட்கொள்வதை மட்டுமே தவிர்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உடலுக்குத் தேவையான திரவ ஆகாரங்கள்
அதோடு மருத்துவ விஞ்ஞான முறைகளின் ஊடாக உடலுக்குத் தேவையான திரவ ஆகாரங்கள் அல்லது ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்வதை சுரேஷ் சலே நிராகரிக்கவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தகைய மருத்துவ முறையிலான ஊட்டச்சத்துக்கள் இன்றி எவராலும் இவ்வளவு காலம் பட்டினியுடன் உயிர்வாழ முடியாது எனத் தெரிவித்த அமைச்சர், முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளரின் இந்த முயற்சி பயனற்ற ஒரு செயம் என்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்