எரிவாயு கொள்கலன்களை வாங்கும்போதே இதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
சந்தையில் சமையல் எரிவாயு கொள்கலன்களை வாங்கும்போதே அதில் கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு கொள்கலனில் ஏற்பட்ட வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. குழு பொதுமக்களுக்கு உடனடி மற்றும் நடைமுறை நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தது, இதனால் நுகர்வோருக்கு 13 பரிந்துரைகளை வழங்க நடவடிக்கை எடுத்தது.
இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பில் 131 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதில் சில சம்பவங்கள் கடந்த சில நாட்களாகவே இடம்பெற்றவை என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பலகே எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
எரிவாயு கொள்கலனில் பொருத்தப்பட்ட ரெகுலேட்டருக்கு பரிந்துரைக்கப்பட்ட காலம் ஐந்து ஆண்டுகள் மற்றும் எரிவாயு விநியோக குழாய்க்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.