பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் தெரிவித்த முக்கிய தகவல்
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் வங்குரோத்து நிலையில் உள்ள வர்த்தகங்களை வலுப்படுத்துவதற்கும் அரச வங்கிகள் முறையை பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளைஞர் பிரதிநிதிகளுடன் தொலைக் காணொளி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இளைஞர்களின் ஆதரவு அவசியமாக உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல கூடிய நிலைமை முதலில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
வங்குரோத்து நிலையில் உள்ள பொருளாதாரத்தை சிறந்த பொருளாதாரமாக மாற்றுவதற்காகவே தாம் ஜனாதிபதியாக பதவியேற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.