யாழில் பல்பொருள் வாணிப முகாமையாளருக்கு தண்டம்
யாழ்ப்பாணத்தில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டிய பல்பொருள் வாணிப முகாமையாளருக்கு, நீதிமன்றால் 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நுகர்வோரிற்கு பழுதடைந்த உணவினை விநியோகம் செய்த உணவக உரிமையாளருக்கும், உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளிச்சுற்றாடலிற்கு அப்புறப்படுத்திய உணவக உரிமையாளருக்கும் முறையே 10 ஆயிரம் மற்றும் 26 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் வழக்கு தாக்கல்
பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட உணவு கையாளும் நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது, காலாவதி கடந்த உணவு பொருளை விற்பனைக்கு காட்சிப்படுத்தியமை ,
பழுதடைந்த உணவு பொருளை விற்பனை செய்த மற்றும் உணவக கழிவு நீரினை வெளி சுற்றாடலுக்கு அப்புறப்படுத்தியமை தொடர்பில் முகாமையாளர் மற்றும் உணவாக உரிமையாளர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இன்றைய தினம்(17) நடைபெற்ற வேளை தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்களை எச்சரித்த மன்று தண்டம் விதித்தது.