கோலாகலமாக இடம்பெற்ற சூப்பர் சிங்கர் புகழ் மாளவிகாவின் திருமணம்!
சூப்பர் சிங்கர் புகழ் பின்னணிப் பாடகி மாளவிகா சுந்தர் தொழிலதிபர் அஸ்வின் காஷ்யப் ரகுராமனை மணந்தார். 33 வயதான பாடகி தன்னை விட சிறிய வயது நபரை காதலித்து திருமணம் செய்து உள்ளார்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர்.அந்த போட்டோக்களும் இணையத்தில் வைரலானது.
பாடகி மாளவிகா, கொம்பன் படத்தில் இருந்து கருப்பு நிறத்தழகி, கடவுள் இருக்கான் குமாருவில் , கம் ஜாரே போன்ற சில வெற்றிப் பாடல்கள் உட்பட பல சினிப் பாடல்களைப் பாடியுள்ளார்.
அதோடு மனம் கொத்தி பறவையில் டி இமானின் இசையமைப்பில் டங் டங் என்ற பாடலைப் பாடி பிரபலமானவர். இதேவேளை மாளவிகா பிரபல கர்நாடக பாடகியும் ஆவார்.
இந்நிலையில் மாளவிகாவின் திருமண நிகழ்வு புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.


