சூப்பர் சிங்கர் வைல்ட்கார்டில் வெற்றி பெற்றவர் யார்? மானஸியின் ஆனந்தக்கண்ணீர்
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். எத்தனை சீசன் வந்தாலும் பார்வையாளர்களுக்கு சலிக்காத ஒரு நிகழ்ச்சி என்றுதான் சொல்லவேண்டும்.
பெரியவர்களுக்கான 8வது சீசன் தான் இப்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. அண்மையில் நிகழ்ச்சியின் WildCard சுற்று நடந்தது, அதில் இருவர் வெற்றிபெற்றுள்ளனர்.
ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி இருவரும் வைல்ட் கார்டில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள நிலையில் மானஸி தான் தெரிவானதையிட்டு ஆனந்தக்கண்ணீர் வடித்துள்ளார்.
இதேவேளை அவர்கள் இருவரும் வைல்ட்கார்டில் ஸ்ரீதர் சேனா , மானசி இருவரும் வெற்றிபெற்றாலும் மேலும் சிலர் பார்வையாளர்களுக்கு பேவரெட் போட்டியாளர்களாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.