எல் நினோ தாக்கம் - பெருங்கடல்களின் வெப்பநிலை அதிகரிப்பு!
சூப்பர் எல் நினோ தாக்கம் காரணமாக உலகில் பல்வேறு தாக்கங்க்காள் ஏற்பட்டுவருகின்றது. வெள்ளப்பேருக்கு , தண்ணீர் பற்றாக்குறை என்பன எல் நினோக்வால் நிகழும் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும் நிகழ்வு ‘எல் நினோ’ என அழைக்கப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு மற்றும் புயல்கள்
இந்நிலையில், இந்த ஆண்டு ‘சூப்பர் எல் நினோ’ உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், இதன் தாக்கத்தால் உலகின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி மற்றும் வெப்பநிலை உயர்வும், ஏனைய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் புயல்கள் உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.
எல் நினோவின் தாக்கத்துடன், உலகப் பெருங்கடல்களின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கடந்த மாதம் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 29.70 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. 1979ஆம் ஆண்டு முதல் கடல் வெப்பநிலையைத் தினசரி அடிப்படையில் கண்காணித்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் அமைப்பு பதிவு செய்த தரவுகளின்படி, இந்த வெப்பநிலை குறிப்பிடத்தக்க உயர்வாகக் கருதப்படுகிறது.
இதற்கு முன்னர், 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரே நாளில் 29.09 டிகிரி செல்சியஸ் கடல் மேற்பரப்பு வெப்பநிலை பதிவாகியிருந்தது. தற்போது அதைவிட அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
காலநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக உலகப் பெருங்கடல்களின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் எல் நினோ நிகழ்வு இந்த வெப்பநிலை உயர்வை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.