உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூழ்ச்சி அம்பலமாக தொடங்கியுள்ளது; பேராயர்
சூழ்ச்சியாளர்களுக்கு ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது என தெரிவித்த பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எனவே, இந்நாட்டுக்கு மாற்றம் வேண்டும். புதிய ஆரம்பமும் அவசியம் என்றும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதி கோரி நீர்கொழும்பு பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையலேயே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தேர்தலுக்காக பயன்படுத்தினர்.அதன் பின்னணியில் சூழ்ச்சி இருக்கின்றது என நாம் ஊகித்தோம். தற்போது அது நிரூபணமாகி வருகின்றது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை. முஸ்லிம்மக்கள்மீது பழி சுமத்த முற்பட்டனர். இந்தியாவில் உள்ள யாசகர் ஒருவர் எமக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.
இந்நிலைமைக்கு நாடு வந்துள்ளது.
எனவே, எமக்கு மாற்றமும், புதிய ஆரம்பமும் அவசியம் எனவும் பேராயர் இதன்போது மேலும் தெரிவித்தார்.