வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி; சிறீதரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஏழு பேருக்கு அழைப்பாணை!
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பேரணியில் கலந்து கொண்டமைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தினர் நீதிமன்றத்தின் அழைப்பாணை பெற்று வழங்கியுள்ளனர்.
அந்தவகையில் தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்த கோரி இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் இயக்கத்தின் தலைவர் வேலன் சுவாமிகள் அவர்களுக்கான அழைப்பாணை இன்று (08) மதியம் ஒரு மணிக்கு சிவகுரு ஆதீனத்தில் வைத்து வழங்கப்பட்டது.
சிவில் உடையில் வந்த பொலிஸாரே அழைப்பாணையை வழங்கியதாக வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

