கோடைகால சளி, இருமலை விரட்டி அடிக்கும் தூதுவளை!
வீதியோரங்களில் வளரும் தூதுவளை , கோடைகால சளி, இருமலை விரட்டி அடிப்பதோடு அல எண்ணற நன்மைகள் உள்ளன. தற்போதைய காலகட்டத்தில் தூதுவளை செடியை வீடுகளில் வளர்ப்பவர்கள் மிக குறைவு.
அது முள் செடியாக இருப்பதும் ஒரு காரணம். ஆனால் வீட்டில் வயதானவர்கள் இருந்தால் தூதுவளை நன்மைகள் பற்றி அவர்கள் அறிந்திருப்பார்கள். தற்போது வாட்டி எடுக்கும் சளி இருமல் போன்றவற்றை விரட்டி அடிக்கும் வல்லமை துதுவளைக்கு உண்டு.

எண்ணற்ற மருத்துவக் குணங்கள் கொண்ட மூலிகை
தூதுவளை எண்ணற்ற மருத்துவக் குணங்கள் கொண்ட மூலிகை. குளிர், சளி, இருமல் முதல் நினைவாற்றல் வரை பல நன்மைகள் தரும் இயற்கை மருந்து.
தும்மல், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல்
தூதுவளையை துவையலாகச் செய்து சாப்பிட்டால் தும்மல், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல், சளி போன்ற பிரச்னைகள் குறையும்.
தூதுவளை இலைகளை நெய்யில் வதக்கி, துவையலாக்கி வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டால் வாய்வுக்கோளாறுகள் விலகும், உடல் வலிமையும் அதிகரிக்கும்.
தூதுவளையால் ரசம், சூப் செய்து குடித்தாலும் நெஞ்சுச் சளி விரைவில் தணியும்.

நெஞ்சுச்சளிக்கு உடனடி நிவாரணம்
ஐந்து இலைகளுடன் சின்ன வெங்காயம், கல் உப்பு சேர்த்து நசுக்கி, சாறு எடுத்து நீருடன் கொதிக்கவைத்துக் குடித்தால் இருமல், நெஞ்சுச்சளிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
கைப்பிடி அளவு தூதுவளை இலைகளை மையாக அரைத்து தோசை மாவோ கோதுமை மாவோ கலந்து செய்யும் உணவுகள் தொண்டை வலி மற்றும் தொண்டை எரிச்சலைக் குறைக்கும்.

மூளைத்திறன், நினைவாற்றல்
தூதுவளை இலை, அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு (தலா 10 கிராம்) சேர்த்து கஷாயம் செய்து தினமும் 50 மி.லி. அருந்தினால் தொண்டைச்சதை கரையும்.
தூதுவளைப் பூக்களை பாலில் வேகவைத்துச் சாப்பிட்டாலோ, நெய்யில் வதக்கி தயிருடன் சேர்த்தாலோ மூளைத்திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.
தூதுவளைப் பூக்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடல்நலம் சிறக்கும், ஆண்மைக்குறைபாடு சரியாகும் என பரம்பரை வைத்தியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.