இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்குவது தொடர்பில் சுமந்திரன் விடுத்த கோரிக்கை!
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்குவது தொடர்பாக ஆராயப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று வட மாகாணக் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் போது சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , இழுவைப் படகுளைத் தடை செய்வதற்கென்று 2017 ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. அது இன்றுவரை அமுல்ப்படுத்தப்படாமல் உள்ளது.
அதை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு முற்றுமுழுதாக கடற்தொழில் நீரியல் துறை அமைச்சிடமே காணப்படுகின்றது. ஆகவே இதிலே இருந்து உருவான பிரச்சினையாகத் தான் இந்தியா மீனவர்களுக்கு இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்று மீனவ சங்கங்கள் சமாசங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ் நடவடிக்கைகள் எதிர்க்கப்பட வேண்டுமெனவும், உரிய சட்டங்கள் அமுல்ப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
அந்த தீர்மானங்களை இலங்கை மற்றும் இந்தியா அரசாங்கங்களுக்குத் தெரியப்படுத்தவுள்ளோம்.
இச் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாமல், விசேடமாக இழுவை மடிப்படகுகள் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றது என்பதை நோக்காகக் கொண்டு பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை போராடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.