தனி ஒருவனாக ஊரையே அலற விட்ட இளைஞன் ; போதைக்காக அரங்கேறிய சம்பவம்
கிரிவத்துடுவ, மில்லகவத்த பகுதியில் உள்ளூர்வாசிகளை துப்பாக்கியால் சுட்டு, மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 வயதான பெண் ஒருவர் காயமடைந்து கஹதுடுவ வெதர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு மிரட்டல்
சந்தேக நபர் கையில் துப்பாக்கியொன்றையும் லைட்டரையும் வைத்திருந்ததாகவும் அவரைக் கைது செய்ய வந்த பொலிஸாரை சுடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
போதைப்பொருளை வாங்குவதற்காகவே குறித்த நபரால் இப் பணப் பறிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் ஏற்கனவே நான்கு பேரை ஆயுதங்களால் வெட்டி காயப்படுத்திய குற்றத்துக்காக சிறைக்குச் சென்று வந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
32 வயதான சந்தேக நபர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்பதோடு கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.