சுமந்தரனின் முடிவே எனது முடிவு! சிறிதரன் பகிரங்க அறிவிப்பு
கடந்த 11ஆம் திகதி இலங்கை தமிழசுக் கட்சியின் அரசியல் குழு இணையவழி ஊடாக கூட்டமொன்றை பதில் பொதுச் செயலாளர் பா.சத்தியலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார்.
குறித்த கூட்டத்தில் தற்போது நாட்டில் உள்ள நிலைமை மற்றும் அரசியல் சூழ்நிலை என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில், தற்போது நாட்டின் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணிலை ஒருபோதும் எந்தவொரு அதிகாரத்திலும் அமர இடமளிக்க முடியாது என சுமந்திரன் கருத்து தெரிவிக்க அதற்கு ஒரு சிலர் விளக்கங்களையும் கொடுத்திருந்தனர்.
அந்த கருத்திற்கு வலுவாக சிறீதரனும் ரணில் விக்ரமசிங்கவை ஒரு போதும் ஆதரிக்க முடியாது என தெரிவித்ததுடன், சிறீதரன் மற்றும் சுமந்திரன் குறித்த கூட்டத்தில் ரணிலை தொடர்ந்து எதிர்பபோம் எனகூட்டாக முடிவெடுத்துள்ளனர்.
எனினும் ஒரு நாள் என்றாலும் அப்போதைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதை அனுமதிக்கக் கூடாது, அது எமக்கு நல்லதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்த போது அதனை சிறீதரன் முழுமையாக ஆதரிப்பது என்றும், எந்தவொரு விட்டுக் கொடுப்பையும் செய்ய முடியாது சுமந்திரனின் நிலைப்பாடே அரசியல் ரீதியாக எனது நிலைப்பாடு என கடுந்தொனியில் எச்சரித்திருந்ததாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.