சுக்கிரனால் உருவாக்கும் ராஜயோகம் ; இந்த 3 ராசிக்காரர்களுக்கு தேடி வரப்போகும் பணக்கார யோகம்
ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அதன் நிலைகளால் மட்டுமின்றி, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாக்கும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை டேம்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவார்கள். மொத்தத்தில் சுக்கிரனின் அருளால் நிறைய செல்வத்தை பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனை கண்டு மகிழ்வார்கள். உங்களின் முயற்சிகள் ஒவ்வொன்றும் நல்ல வெற்றியைப் பெறும். உறவினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.