சுக்கிரனால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் மிகவும் முக்கியமான கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் சுக்கிரன் காதல், செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் கிரகமாக அறியப்படுகிறது. சுக்கிரன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறது. சுக்கிரனின் இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சுக்கிரன் ஏப்ரல் 19 ஆம் திகதி தனது சொந்த சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கப் போகிறார். இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளை அளிக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று நாம் இங்கு பார்ப்போம்.

| ரிஷபம் | ரிஷப ராசிக்குள் சுக்கிரன் செல்வது அவர்களுக்கு பல சாதகமான மாற்றங்களை அளிக்கப்போகிறது. அவர்கள் எதிர்பாராத பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும். வாழ்க்கையில் வளர்ச்சிக்குத் உதவும் பல வாய்ப்புகள் அவர்களைத் தேடிவரும். அவர்களின் வேலையில் அவர்கள் புதிய உயரத்தை அடைய முடியும். பணியிடத்தில் உங்களுக்கு எதிராகப் பணியாற்றியவர்கள் உங்களிடம் சரணடைவார்கள்.வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். வேலையில் இருக்கும் சில ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் பதவி உயர்வோ அல்லது வருமான உயர்வோ ஏற்படலாம். இதுவரை துன்புறுத்தி வந்த கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். மாணவர்கள் தேர்வில் சிறப்பாக செயல்படலாம். இது அவர்கள் வாழ்க்கையின் முக்கியமான காலக்கட்டமாக இருக்கும். |
| கன்னி | ரிஷப ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வருமானத்தைத் தரக்கூடும், மேலும் அதிக நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் வீடு தொடர்பான பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். மேலும், இந்தப் பெயர்ச்சியின் போது உங்கள் குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து முழுமையான ஆதரவைப் பெறலாம். தொழில்ரீதியாக, இந்த பெயர்ச்சியின் போது அவர்கள் வேலை தொடர்பாக புதிய வாய்ப்புகளைப் பெறலாம். வேலை தொடர்பாக வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்புகள் உருவாகும், மேலும் உங்களுக்குக் கிடைக்கும் புதிய வாய்ப்புகளால் நீங்கள் மகிழ்ச்சியடையக்கூடும் என்பதால், நிறைவாக உணர்வீர்கள். இந்த பெயர்ச்சியின் போது உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறலாம். |
சிம்மம் | சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி அவர்கள் எதிர்பாராத நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிகளவு செல்வத்தை குவிக்க முடியும், மேலும் அவர்களின் முதலீடுகள் அவர்களுக்கு பெரும் வெற்றியைத் தரும். இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் அடையலாம். இதுவரை கிடப்பில் போட்டிருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் தங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும், அவர்களின் தேர்வு முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். |