யாழில் இளம் அரசாங்க ஊழியரின் இறப்பில் பகீர் தகவல்
யாழ்ப்பாணத்தில் தவறான முடிவால் உயிரிழந்த கிளிநொச்சி நீர்பாசன திணைகள ஊழியரின் மரணத்தின் பின்னால் அவரது உயரதிகளின் செயலே உள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர் அரசாங்கத்தில் மாதம் 40 ஆயிரம் சம்பளத்தைப் பெறும் சாதாரண ஒரு ஊழியர் என்றும் உயிரிழந்தவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள்தாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அந்த வருமானத்தை கொண்டே தனது குடும்பத்தை நடத்திச்சென்றதாக கூறப்படுகின்றது.
உயரதிகாரிகளின் ஈவிரக்கற்ற செயல்
யாழ் பண்ணைப் பகுதியில் உள்ள நீர்ப்பாசனத திணைக்களத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்த நபரை , கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உயரதிகாரிகள் மாற்றியுள்ளார்கள் . அவர் யாழ்ப்பாணத்திலிருந்த கிளிநொச்சி சென்று வருவதற்கு நாளாந்தம் ஆயிரம் ரூபா செலவேண்டியுள்ளதாக கூறப்படுகின்ற்து.
தனது சம்பளத்தின் பெரும் பகுதி போக்குவரத்திற்கு செலவாகிவிடும் என எண்ணிய அவர் , உயரதிகாரிகள் பலரிடம் தனது குடும்பச் சூழ்நிலையை கூறி கிளிநொச்சி இடமாற்றத்தை இரத்துச் செய்ய கேட்டபோதும் அவரது கோரிக்கை உயரதிகாரிகளிடம் எடுபடவில்லை.
கிளிநொச்சிக்கும் தினமும் சென்று வந்த போதும் தனது பிள்ளைகளின் சுகவீனம் மற்றும் அவர்களின் பாடசாலை கற்றல் நடவடிக்கை போன்ற செயற்பாடுகளுக்காக லீவு எடுத்ததாகத் தெரியவருகின்றது.
குறித்த லீவுகளுக்கு முறைப்படி முன்னரே உயரதிகாரிகளின் அனுமதி பெறப்படவில்லை என காரணம் காட்டி அவரது சம்பளத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாவை கிளிநொச்சி நீர்ப்பாசணப் பொறியியலாளர் வெட்டியதாக கூறப்படுகின்றது.
இதனால் அதிர்ச்சியடைந்து கடும் விரக்தியுடன் வீடு திரும்பிய ஊழியர் தனது 3 பெண் குழந்தைகள், மனைவியை அநாதையாக விட்டுவிட்டு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தவிக்கும் மனைவி பிள்ளைகள்
அவரது மரணவீட்டுக்கு நீர்ப்பாசணத் திணைக்கள உயரதிகாரிகள், ஊழியர்கள் வந்து கலந்து கொண்டிருந்ததாக கூறப்படும் அதேவேளை, ஆஸ்மாவின் கொடுமையால் நீர்ப்பாசன தற்கொலை செய்ததாக கூறி அவரது மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
பல காலமாக ஆஸ்மா நோய் இருந்தவர் சம்பளம் கழித்தபின் தற்கொலை செய்தார் என்றால் அதற்கு என்ன காரணம் எனவும் சமூக ஆர்வலர்களால் கேள்வி எழுப்பட்டுள்ளது.
அரச உயரதிகாரிகளில் சிலர் அரசாங்கத்தால் தமக்கு வழக்கப்படும் அனைத்துச் சலுகைகளையும் பெறுவதோடு, ஊழல், நிர்வாகத்துஷ்பிரயோகங்களையும் செய்து கொண்டு அப்பாவி ஊழியர்களை பழிவாங்குவது நியாயமானதா? என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தந்தையை இழந்து தவிக்கும் அப்பாவி குழந்தைகளின் எதிர்காலத்திற்கு யாழ் பொறுப்பு எனவும், சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.