கடன் பிரச்சனையால் அவதிப்படுகின்றீர்களா இந்த பரகாரத்தை செய்து பாருங்கள்
தற்போதைய சூழ்நிலையில் கடன் பிரச்சனையால் பலர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து இருக்கின்றார்கள்.
எவ்வளவு பெரிய கஷ்ட சூழ்நிலை வந்தாலும் முடிந்தவரை கடன் வாங்காமல் அதை சமாளிக்க பாருங்கள்.
பரிகாரம்
கால பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றினால் கடன் குறையும் என்று கூறப்படுகிறது. அது தேய்பிறை அஷ்டமி அன்று கோவிலுக்கு சென்று அந்த தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது.
உங்களால் சமாளிக்க முடியாத கடன் பிரச்சனை இருக்கிறது என்றால் உடனடியாக இந்த பரிகாரத்தை நீங்கள் வீட்டிலும் செய்யலாம்.
எவ்வாறு செய்ய வேண்டும்
வெள்ளை துணி அல்லது மஞ்சள் துணி, சின்ன சதுர வடிவில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 27 மிளகு வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். பூஜை அறையில் இந்த விளக்கை ஏற்றலாம்.
ஒரு சிறிய தட்டின் மேல் மண் அகல் விளக்கை வைத்து, அதன் மேல் நல்லெண்ணெய் ஊற்றி தயார் செய்து வைத்திருக்கும் இந்த முடிச்சை அந்த நல்லெண்ணெயில் நனைத்து அப்படியே தீபம் ஏற்றி விடுங்கள்.
நீங்கள் முடிச்சாக கட்டி இருக்கும் அந்த மூட்டை அப்படியே நெருப்பில் எரியும். மிளகு வெடிக்கும்.
அந்த விளக்கத்திற்கு முன்பு அமர்ந்து கால பைரவரை நினைத்து இருக்கும் கடன் கரைய வேண்டும் என்று மனதார, பக்தியோடு, நம்பிக்கையோடு, வேண்டிக் கொள்ள வேண்டும்.
மந்திரம்
பிறகு கால பைரவருக்கு உகந்த ‘ஓம் ஸ்ரீ மகா ருத்ர கால பைரவாய நமஹ’ இந்த மந்திரத்தை உச்சரித்து கடன் கரைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
தினமும் இந்த தீபத்தை வீட்டிலிருந்தபடியே ஏற்றலாம். கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்ற கவலை கூட தேவையில்லை.
காலபைரவர் வழிபாடு
காலபைரவரை நினைத்து வீட்டில் பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்றியவர்கள் வாழ்வில் கடன் பிரச்சனையால் கஷ்டம் என்பதே வராது.
வட்டி கூட கட்ட முடியாத நிலையில் இருப்பவர்கள் முழு கடனையும் திருப்பிக் கொடுக்கும் சந்தர்ப்பத்தையும் கால சூழ்நிலையையும் அந்த கால பைரவர் நிச்சயம் காட்டிக் கொடுப்பார்.
இந்த விளக்கை எத்தனை நாள் ஏற்றுவது. கடன் தீரும் வரை ஏற்றினால் ரொம்ப ரொம்ப நல்லது. முடியாதவர்கள் தொடர்ந்து 5 நாள், 11 நாள், உங்கள் கஷ்டத்தை பொறுத்து உங்களுடைய பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள்.
பரிகாரத்திற்கு நம்பிக்கை தாங்க முக்கியம். நம்பிக்கையோடு கடன் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து தான் பாருங்களேன்.
உங்கள் வாழ்க்கையில் விடிவு காலம் நிச்சயம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.