திடீர் எடை இழப்பு மகிழ்ச்சியா? அது ஆபத்தின் அறிகுறி; அலட்சியம் வேண்டாம்!
இன்றைய அவசர வாழ்க்கை முறையில் எடை அதிகரிப்பு என்பது அனைவருக்கும் மிகப்பெரிய ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. மக்கள் அதிகரிக்கும் எடையை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி என ஏராளமான வழிகளில் தங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். எனினும், திடீரென உடல் எடை குறைவது ஆபத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
உடல் எடை குறைந்தால் போதும் என அதற்காக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள், அப்படி நடக்கும்போது மகிழ்ச்சி அடைகிறார்கள். அதனால் அது ஆபத்தின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும் என துறைசார் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
திடீர் எடை இழப்பு
திடீரென உடல் எடை குறைந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், காரணமின்றி தொடர்ந்து எடை குறைவது சில தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என சுகாதார வால்லுனர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
ஆகையால், உடல் எடை குறைந்தால், அதில் அதிக கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.
நீரிழிவு நோய்
உடலில் சர்க்கரை நோய் பிரச்சனை வந்தால் எடை குறைகிறது. உடலில் சர்க்கரையின் அளவு தேவைக்கு அதிகமாக அதிகரிக்க ஆரம்பித்தால் அது எடையை பாதிக்கிறது. இதில் முதலில் நோயாளியின் எடை கூடி கொழுப்பாக மாறுகிறது.
இதையடுத்து சர்க்கரை ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்கும்போது மீண்டும் எடை குறைய ஆரம்பிக்கிறது. சர்க்கரை ரத்தத்திலேயே இருந்துவிடுவதும், அவை செல்களை அடையாததும்தான் இதற்கு காரணமாகும்.
இதனால் நோயாளிகள் பலவீனமாகி, மெலிந்து கொண்டே போவார்கள். ஆகையால் திடீரென உடல் எடை அதிகரித்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும்.
புற்றுநோய்
இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. மறுபுறம், புற்றுநோய் குணப்படுத்த முடியாத நோய் அல்ல. எனினும், அதன் அறிகுறிகளை சரியான நேரத்தில் அடையாளம் காண வேண்டியது அவசியம்.
இந்த அறிகுறிகளில் ஒன்று எடை இழப்பு. ஒருவருக்கு புற்றுநோய் வந்தால், அவரது எடை மிக வேகமாகக் குறையத் தொடங்குகிறது. உடல் புற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது, உடலின் ஊட்டச்சத்துக்கள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடத் தொடங்குகின்றன.
இதன் காரணமாக எடை இழப்பு ஏற்படுகின்றது.
ஆகையால், உடல் எடை மிக விரைவில் மிக அதிகம் குறைந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது.