கொழும்பு மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம் ; சிக்கப்போகும் தனியார் கல்வி நிலைய நிறுவனர்
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர் வழங்கிய பகீர் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மாணவியின் பெற்றோர் லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கியுள்ள தனிப்பட்ட நேர்காணலில் போது வெளிகொணரப்பட்டுள்ளது.
தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. மாணவி உயிரிழப்பதற்கு முன்பு நடந்த அனைத்து சம்பவங்களையும் விவரமாக எழுதியுள்ளதுடன், அவரின் மரணத்திற்கு காரணமான நபர்கள் தொடர்பான விடயங்களையும் அதில் கூறியுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த மாணவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அதற்காக முன்னதாகவே பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் உட்படுத்தப்பட்டிருந்தாகவும் பல்வேறு தரப்பினரால் போலித் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இடத்தில் குறித்த மாணவியை எழுப்பி நிறுத்தி அவமானம் படுத்தியத்தியால் உள ரீதியில் பாதிக்கப்பட்டதால் குறித்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணொளியை நாம் இங்கு காணலாம்.......