மாளிகாவத்தை புகையிரத நிலையத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பு
மாளிகாவத்தை ரயில் முனையத்தில் இருந்து புறப்படும் ரயில்களில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
காவலர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் கடமைகளை இடைநிறுத்துமாறு கோரி பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் திடீர் ரயில் பணிப்புறக்கணிப்பு சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை
மாளிகாவத்தை ரயில்வே முற்றத்தில் ஏற்பட்ட தகராறில் இத் தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையால் மாளிகாவத்தை புகையிரத நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் புகையிரதங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக ரயில்வே பொது மேலாளருடன் (ஜிஎம்ஆர்) ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.