சிறைக்குள் திடீர் சோதனை ; பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த கைதிகள்
பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “மன்னா ரமேஷ்” என்பவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் நேற்று (21) கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, “மன்னா ரமேஷ்” என்பவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டில் இருந்து 1 கிரொம் ஹெரோயின் போதைப்பொருள், கையடக்கத் தொலைபேசிகள், 2 சிம் அட்டைகள், டேட்டா கேபிள் மற்றும் கையடக்கத் தொலைபேசி சார்ஜர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.