திடீர் மின் தடை ; எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள்!
நாட்டில் திடீரென ஏற்பட்ட மின்சார விநியோக தடை காரணமாக பல பகுதிகளில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மின் தடை காரணமாக எரிபொருள் விநியோகிக்கும் இயந்திரங்கள் இயங்காமையினால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்களின் நீண்ட வரிசைகளைக் காணக்கூடியதாக உள்ளது.

இயல்பு நிலைக்குக் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை
இந்த நிலையில், நிலைமையைச் சீர்செய்து, எரிபொருள் விநியோகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதேசமயம் நாடு தழுவிய மின்தடையைத் தொடர்ந்து, இன்று (17) மதியத்திலிருந்து படிப்படியாக மின் விநியோகத்தை மீட்டெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மாலை சுமார் 6.30 மணியளவில் தேசிய மின் கட்டமைப்பை முழுமையாகச் சீரமைக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.