திருக்கோவில் பகுதியில் வீடொன்றில் திடீர் தீ விபத்து! தீக்கரையான அறை
திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் வீட்டில் ஓர் அறை பலத்த சேதம் பொருட்கள் தீக்கரையாகியுள்ளது.
திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் 02 கப்புகநார் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு வேளையில் திடீர் தீபவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் வீட்டின் ஒர் அறை முற்றாக எரித்து சேதமாகியதுடன் அவ் அறையில் இருந்த பொருட்களும் தீப்பரவலில் ஏரிந்து தீக்கரையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
மேலும் இச்சம்பவமானது நேற்று திங்கள்கிழமை (10-10-2022) இரவு 6.00 மணிமுதல் 9.00 மணிவரையான நேரப்பகுதியில் இடம்பெற்றுள்ளது தெரிவிக்கப்படுகின்றது.
இத் தீவிபத்திற்கான காரணம் மின்சார இணைப்பு என முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.
இது பற்றிய மேலதிக விசாரனையை திருக்கோவில் பொலிஸ்சார் மேற்கொண்டுவருகின்றனர்.