யாழ் பிரபல வைத்தியாசலையில் திடீர் தீ; எரிந்து நாசமான மருந்துப்பொருட்கள்
யாழ்.தெல்லிப்பளை வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீயின் காரணமாகவே மருந்துப் பொருட்க்கள் எரிந்துள்ளது. மின்னொழுக்கே தீ விபத்திற்கான காரணம் என ஆரம்பத் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயினை படையினர் பொது மக்கள் இணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபோதும் பெருமளவு மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்நிலையில் யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் காலாவதியான மருந்துகளே தீயில் எரிந்துள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
நேற்றைய தினம் மாலை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள மருந்து களஞ்சியத்தில் திடீர் தீ விபத்து இடம்பெற்றமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் .
அத்துடன் தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்ததோடு இழப்பீடு தொடர்பில் விசாரணைகளின் பின்னரே தெரியவரும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நாட்டில் மருந்து பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.