இருவேறு இடங்களில் ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் தலைமன்னாரிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடுகண்ணாவை பகுதியில் ரயிலில் மோதி உயிரிழப்பு
இதேவேளை, கடுகண்ணாவை பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியில் கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுகண்ணாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கண்டியிலிருந்து பொல்கஹவெல நோக்கிச் செல்லும் ரயிலில் மோதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ, கனத்தொட்டை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சடலம் பேராதனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கடுகண்ணாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.