ஐரோப்பிய நாடுகளில் தீடிரென வெடித்த போராட்டம்: வீதியில் இறங்கிய மக்கள்
ஆஸ்திரிய அரசாங்கம் திங்கள் முதல் தழுவிய முடக்க நிலையை அறிவித்ததை அடுத்து, தீவிர வலதுசாரி குழுக்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் சனிக்கிழமை அன்று தலைநகர் வியன்னா வழியாக அணிவகுத்துச் சென்றனர்.
ஆஸ்திரியா மட்டுமல்லாது கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் சுவிட்சர்லாந்து, குரோஷியா, இத்தாலி, வடக்கு அயர்லாந்து மற்றும் நெதர்லாந்திலும் சனிக்கிழமை நடந்தன. மேற்கண்ட நாடுகளில் கட்டாய கொரோனா தடுப்பூசி அமுல், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய கொரோனா அனுமதி அட்டை என்பவற்றுக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் அணி திரண்டனர்.
The Hague riots live #TheHague #Holland pic.twitter.com/d0ko9YmZFn
— Pierre Crom (@PierreCrom) November 20, 2021
ஆஸ்திரியாவில் திங்கள் முதல் அமுலுக்கு வரும் முடக்கல் நில குறைந்தது 10 நாட்களுக்கு நீடிக்கும். மளிகை பொருட்கள் வாங்குவது, வைத்தியரிடம் செல்வது அல்லது உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியும்.
VIDEO: Young people removing traffic surveillance equipment in #DenHaag ?? tonight as protests spread over the attempted reimposition of #lockdown in the Netherlands. pic.twitter.com/c2FTeV9uTs #NoVaccinePassports #NoLockdown #Rutte ?? #EU #NWO
— Manchester Chronicle ? (@WithyGrove) November 20, 2021
பெப்ரவரி 1 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அந் நாட்டு அரசாங்கம் கட்டாயமாக்குகிறது.
ஆஸ்திரியாவின் 8.9 மில்லியன் மக்களில் 66 சதவீதம் பேருக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி போடவில்லை, இது மேற்கு ஐரோப்பாவில் மிகக் குறைந்த விகிதங்களில் ஒன்றாகும்.