பெற்றோர் தகராறில் 9 வயது பிள்ளைக்கு நேர்ந்த கதி ; தந்தை தப்பியோட்டம்
பெற்றோர் தகராறில் பறிபோன 9 வயது பிள்ளையின் உயிர் கண்டியில் கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹ பகுதியில் உள்ள வீடொன்றில் தாய் மற்றும் தந்தைக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் பிள்ளை தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலஹ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (17) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிள்ளை அலறும் சத்தம்
9 வயதுடைய பெண் பிள்ளை ஒன்றே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று வீட்டினுள் தாய் மற்றும் தந்தைக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது வீட்டினுள் தீ பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் பிள்ளை தீக்காயங்களுக்குள்ளாகி பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தந்தை தான் வீட்டிற்குள் தீ வைக்க முயன்றதாக பிள்ளையின் தாய் பொலிஸாரிடம் கூறியுள்ளார். ஆனால் அயல் வீட்டாளர்கள், “ஏன் அம்மா எனக்கு இப்படி செய்தீர்கள்” என பிள்ளை அலறும் சத்தம் கேட்டதாக பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
எவ்வாறிருப்பினும், இந்த சம்பவத்தை அடுத்து பிள்ளையின் தந்தை பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் கலஹ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.