பிரபல தமிழ் நடிகை திடீர் மறைவு ; சோகத்தில் திரையுலகம்
பிரபல தமிழ் நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் உயிர்ழந்துள்ளமௌ திரயுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவர் தமிழ் சினிமாவில் 80-களின் காலகட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் சித்ரா. சரத்குமார் நடிப்பில் வெளியான 'சேரன் பாண்டியன்' படத்தில் தங்கையாக நடித்த பிறகு மிகவும் பிரபலமானார்.
அதன்பின்னர் ஒரு நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததை அடுத்து, நல்லெண்ணெய் சித்ராவாகவே கோலிவுட்டில் அடையாளப்படுத்தப்பட்டார். சித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து சினிமா, சீரியல்களில் நடித்து வந்தார். இந்நிலையில், சென்னையில் கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்த சித்ரா இன்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார்.
நடிகை சித்ராவின் திடீர் மரணம் திரையுலகத்தினர் மற்றும் அவரது , ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.