புகழ்பெற்ற நடிகர் திடீர் உயிரிழப்பு
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் நடித்து புகழ்பெற்ற அரவிந்த் திரிவேதி மாரடைப்பால் காலமானதாக கூற்ப்படுகின்றது. உயிரிழக்கையில் அவருக்கு வயது 87.
ராமானந்த் சாகர் இயக்கத்தில், கடந்த 1987ம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயணம் தொடர் மிகவும் பிரபலமானது. இந்த சீரியலில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் அரவிந்த் திரிவேதி.
அதுமட்டுமல்லாது , ஹிந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அரவிந்த் திரிவேதி, குஜராத்தில் பாஜக சார்பில் எம்.எல்.ஏவாகவும் இருந்தவர். அரவிந்த் திரிவேதி மும்பை காந்திவெலி பகுதியில் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் , மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரது மறைவுக்கு , இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி மற்றும், திரைத்துறையினர் , அவரது ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
