தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி நிலை நிலவுகிறது.
இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 6,69,130 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 1,88,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 1,73,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 1,65,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.