நீர்ச்சறுக்கலுக்கு சிறந்த இடம் இலங்கை; அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மகிழ்ச்சிப் பதிவு
நீர்ச்சறுக்கலுக்கு சிறந்த இடமாக இலங்கை திகழ்கிறது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,
நான் கலிபோர்னியாவில் பிறந்த பெண்ணாக இருந்தாலும், நான் இதற்கு முன்னர் ஒருபோதும் நீர்ச்சறுக்கல் விளையாடியதில்லை. ஆனால் எனது பயத்தை ஓரங்கட்டி கடைசியாக இலங்கையில் நீர்ச்சறுக்கல் செய்தேன்.

இலங்கை உலகின் மிகச்சிறந்த இடங்களில் ஒன்றாகும்
எனக்கு பொறுமையுடன் பயிற்றுவித்தவருக்கு நன்றி. ஒரு தூதுவராக மட்டுமல்லாமல், மீண்டும் ஒரு சுற்றுலாப் பயணியாக இலங்கை வந்து மேலும் பயிற்சிகளைப் பெற விரும்புகிறேன்.
இலங்கையின் தெற்கு கடற்கரைப் பகுதி (Southern Coast) நீர்ச்சறுக்கல் விளையாட்டிற்கு உலகின் மிகச்சிறந்த இடங்களில் ஒன்றாகும் என அவர் பாராட்டியுள்ளார்.
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கின் இந்த பகிர்வு இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு, குறிப்பாக தென்னிலங்கை கடற்கரைகளுக்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகின்றது.