தமிழர் பகுதியில் திறக்கப்பட்ட பொலிஸ் நிலைய பெயர்பலகையில் இப்படி ஒரு நிலை!
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் சந்திவெளி பிரதேசத்தில் நேற்றையதினம் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்த நிலையில் குறித்த பொலிஸ் நிலைய பெயர்ப்பலகையில், பிரதேசத்தின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திவெளி என்பதற்கு பதிலாக, சந்திவேலி என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் அதனை கண்டுகொள்வார்களா என்பது கேள்விக்குறியே.
இதேவேளை அரச நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் மொழி தவறாக குறிப்பிடப்படுவது அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், பொலிஸ் நிலைய பெயர்ப்பலகையிலும் தவறாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் சிங்களம் மற்றும் தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில், தமிழர் பகுதியில் உள்ள பொலிஸ் நிலைய பெயர்பலகையில் தமிழ் மொழிக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
