ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து செல்பி எடுத்தவருக்கு ஏற்பட்ட நிலை!
கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் சென்று, ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தெரணியகல பகுதியில் வைத்து அவர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர், சமன்புரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவராவார். இந்நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையை அடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கடந்த மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
