நீரில் மூழ்கியுள்ள மாத்தறை; மக்கள் அவதி
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடும் மழையினால் நில்வலா கங்கை நிரம்பி வழிந்து மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி மாத்தறை மாவட்டத்தில் மாத்தறை மற்றும் கம்புருப்பிட்டிய பிரதேசங்களின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையினால் குறித்த பகுதியினூடாக செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கிய பிரிவுகள்
அத்துடன் அத்துரலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய மற்றும் மாத்தறை பிரதேச செயலகப் பிரிவுகள் கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் நாள் முழுவதும் நில்வலா ஆற்றினை அண்மித்த தாழ்வான பகுதிகள் பாதிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வெல்லவாயவில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) இரவு அதிகரித்துக் காணப்பட்ட கிரிந்தி ஓயாவின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.