உப பொலிஸ் பரிசோதகர் மர்மமான முறையில் உயிரிழப்பு
காலி மாவட்டத்தின், பெந்தோட்ட பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குறித்த பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினுள் இன்று காலை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இத்தவலை எல்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் பலப்பிட்டிய – பாதேகம பகுதியைச் சேர்ந்த 58 வயதான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரென தெரியவந்துள்ளது.
உயிரிழந்த உப பொலிஸ் அதிகாரி நேற்று இரவு ரோந்து பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் பொலிஸ் நிலையத்துக்கு வந்து, போக்குவரத்துப் பிரிவில் உறங்கியுள்ளார்.
இந்நிலையில் வெகுநேரமாகியும் உடல் அசைவற்று காணப்பட்டதால் சக உத்தியோகத்தர்கள் அவருக்கு அருகில் சென்றுபார்த்தபோது அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பலப்பிட்டிய நீதிவான் சம்பவம் இடத்துக்கு சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்ததன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.