ராஜபக்ஷக்களின் முகமூடிகளை அணிந்து கைவிலங்குடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்!
ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் இரண்டு வாரங்களுக்கு மேலாக மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு இலங்கையில் உள்ள முக்கிய தொழிற்சங்களும், மாணவர்களும் ஆதரவுகளை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் இன்றையதினம் (29-04-2022) கொழும்பு - காலிமுகத்திடலில் கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) பதவி விலகுமாறு கோரி மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பாடு வந்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ராஜபக்சர்களின் முகமூடிகளை அணிந்து வந்த மாணவர்கள் குற்றவாளிகள் போல் கைவிலங்கு அணிந்து வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
குறித்த காணொளி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.
Medical students protested today in Colombo demanding President Gotabaya Rajapaksa's resignation pic.twitter.com/tUctlsUTs4 #LKA #SriLanka #SriLankaCrisis
— Sri Lanka Tweet ?? ? (@SriLankaTweet) April 29, 2022